வகைப்படுத்தப்படாத

புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை – பிரதமர்

(UDHAYAM, COLOMBO) – புதிய அரசியலமைப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

 தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள ‘பீப்பிள்ஸ் ஒவ் ஸ்ரீ லங்கா’ என்ற நூல் வெளியிட்டு வைபவத்தில் பிரதமர் உரையாற்றினார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரையாற்றுகையில் .இது நாட்டைப் பிளவுபடுத்தும் அரசியலமைப்பல்ல. இது தொடர்பில் மக்களின் கருத்துக்களைப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் தெரிவித்தார்.
சபாநாயகர் கரு ஜயசூரிய, இமைச்சர் மனோ கணேசன்,  எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உட்பட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆளுநர்கள், வெளிநாட்டுத் தூதுவர்கள் உள்ளிட்ட  இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

තැපැල් සේවක වැඩ වර්ජනය අද 4.00ට අවසන්

UAE leaders perform funeral prayers for Sharjah Ruler’s son

පොලිස් නිලධාරීන් අට දෙනෙකුට ස්ථාන මාරුවීම් – පොලිස් මාධ්‍ය ප්‍රකාශක කාර්යාලය