வணிகம்

புதிய Chat Extensionகளுடன் பிரத்தியேகமான தகவல் அனுப்பும் Viber

புதிய மற்றும் புத்தாக்கமான Chat Extension களை அறிமுகம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனூடாக சுமார் ஒரு பில்லியன் பதிவு செய்யப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு புதிய வழியில் தமது உணர்வுகளையும் உரையாடல்களையும் வெளிப்படுத்தக்கூடியதாக இருக்கும் என ஏiடிநச அறிவித்துள்ளது.

அண்மையில் அறிமுகம் செய்யப்பட்ட Viber இன் Chat Extension பாவனையாளர்களின் உரையாடல்களை மேம்படுத்தும் வகையில் அமைந்துள்ளதுடன், chat இலிருந்து வெளியேறாமல், உடனடியாக GIF கள் மற்றும் YouTube வீடியோக்களை பகிர்ந்து கொள்ள முடியும்.

புதிய Chat Extensionகள் – Viber Shouts என்பது, Viber பாவனையாளர்களுக்கு தகவல்களை பகிர்ந்து கொள்ளக்கூடியதாகவுள்ளதுடன், வண்ணமயமான பின்புலங்களில் chat களை மேற்கொள்ள முடியும். ஏனையவர்களிடமிருந்து வெளிப்படுத்திக் காண்பிக்கக்கூடியதாக இது அமைந்துள்ளது. அறிமுகத்தின் போது 20 க்கும் அதிகமான message bubble பின்புலங்கள் தெரிவுகளை கொண்டுள்ளதுடன், Viber எதிர்காலத்தில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேலும் பல background களை அறிமுகம் செய்யவுள்ளது.

Favorites என்பது, சகல பாவனையாளர்களுக்கும் பயனுள்ள Chat Extension ஆக அமைந்துள்ளதுடன், முக்கியமாக பாவனையாளருக்கு பிடித்த GIFs, links மற்றும் YouTube கள் போன்றவற்றை தெரிவு தெரிவு செய்யப்பட்ட பகுதிகளில் பகிர்ந்து கொள்ள உதவியாக அமைந்துள்ளது. Viber னுள் பாவனையாளர்கள் எந்தவொரு GIF, link அல்லது YouTube வீடியோவில் நீண்ட நேரம் அழுத்தி, அவற்றை தமக்கு பிடித்தவையாக சேகரித்து வைத்திருக்க முடியும். பின்னர், அவற்றை Chat Extension ஐ பயன்படுத்தி இலகுவாக அணுகிக் கொள்ள முடியும்.

Location என்பது இடத்தை பகிர்ந்து கொள்ளும் புதிய அனுபவத்தை வழங்குவதாக அமைந்துள்ளதுடன், அருகிலுள்ள பகுதிகள் தொடர்பான பொருத்தமான தகவல்களை chat இல் பகிர்ந்து கொள்ளும் வகையில் உள்ளது. புதிய அமைவிட செய்தியில் குறிப்பிட்ட பகுதிக்கான “Open” பொத்தான் அடங்கியுள்ளது. பாவனையாளர்களுக்கு தமது தெரிவுக்கமைய navigation app ஐ பயன்படுத்த அனுமதிக்கும். பிரத்தியேக தகவல்களை பொறுத்தமட்டில், இந்த அம்சம் தமது பகுதிகள் பற்றிய விபரங்களை பெற்றுக் கொள்ள Viber க்கு அனுமதியளித்த பாவனையாளர்களுக்கு மாத்திரமே வழங்கப்படும். அத்துடன், தமது நண்பர்களுடன் Location Chat Extension என்பதை தெரிவு செய்தால் மட்டுமே செயற்படும்.

அறிமுகம் செய்யப்பட்டதிலிருந்து, Viber 20 க்கும் அதிகமான உள்ளடக்கம் மற்றும் சேவை பங்காளர்களுடன் கைகோர்த்து வௌ;வேறு Chat Extension களை அறிமுகம் செய்துள்ளது. இதில் GIF களுக்கு GIPHY மற்றும் Tenor போன்றன, ஒன்லைன் வீடியோக்களுக்கு YouTube, music streaming க்கு Spotify மற்றும் news, entertainment, sports மற்றும் food போன்றவற்றுக்கு ஏனையவையும் அடங்கியுள்ளன. கடந்த ஆண்டில், Viber பாவனையாளர்கள் பல்வேறு chat extensionfis 4.5 பில்லியன் தடவை அணுகியிருந்ததுடன், app இனுள் தொடர்பாடல்களை மேம்படுத்துவதற்கு வேகமான வழிமுறையாக அமைந்துள்ளது.

Viber Shouts, Favorites மற்றும் Location chat extension கள் உலகளாவிய ரீதியில் படிப்படியாக அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், iPhone மற்றும் அன்ட்ரொயிட்டில் இயங்கும் Viber மொபைல் app இல் செயற்படும்.

Viber இன் பிரதம நிறைவேற்று அதிகாரி ஜமெல் அகவுவா கருத்துத் தெரிவிக்கையில், ´உலகளாவிய ரீதியில் அதீத ஆர்வத்துடன் Viber ஐ பயன்படுத்தும் மக்களுக்கு தொடர்ச்சியாக உயர் தொடர்பாடல் அனுபவத்தை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்கிறது.

எமது மூன்று புதிய மற்றும் புத்தாக்கமான Chat Extensionfs; Viber ஐ சக்தி வாய்ந்த மற்றும் ஆக்கத்தை வெளிப்படுத்தக்கூடிய சாதனமாக பேணுவதற்கான மூலோபாயமாக அமைந்துள்ளது. வெவ்வேறு பாணியில் மற்றும் நவநாகரிகத்தில் chat செய்வதற்கு வழிமுறையை வழங்குகிறது. இந்த Chat Extension எமது எளிமைப்படுத்தல் மற்றும் பிரத்தியேகத்தன்மை சார்ந்த விடயங்கள் மீதான அர்ப்பணிப்பான நடவடிக்கைகள் தொடர்பில் நாம் மகிழ்ச்சி கொண்டுள்ளோம். Viberஇல் அனுபவத்தை அனைவருக்கும் பிரத்தியேகமானதாகவும் சிறப்பானதாகவும் மாற்றியமைப்பதற்கு எண்ணியுள்ளோம்´என்றார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

ரஷ்யாவிடமிருந்து இராணுவ உபகரணங்களை கொள்வனவு செய்ய முயற்சி

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை

பாண் விலை அதிகரிக்கப்படமாட்டாது…