புதிதாக நிர்மாணிக்கப்பட்ட மன்னார் மரியன்னை ஆலய அபிஷேகம் மற்றும் திறப்பு விழா இன்றைய தினம் சனிக்கிழமை (01) காலை 6.30 மணியளவில் இடம் பெற்றது.
-மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை தலைமையில் குறித்த ஆலயம் அபிஷேகம் செய்யப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
இதன் போது மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் கிறிஸ்து நாயகம் அடிகளார், அருட்தந்தையர்கள்,அருட் சகோதரர்கள், ,அருட்சகோதரிகள்,ஆயிரக்கணக்கான மக்களும் கலந்து கொண்டனர்.
ஆலயம் திறந்து வைக்கப்பட்டதை தொடர்ந்து மன்னார் மறைமாவட்ட ஆயர் தலைமையில் குருக்கல் இணைந்து திருப்பலியை ஒப்புக் கொடுத்தனர்.
-லெம்பேட்