அரசியல்உள்நாடு

புதிதாக நியமிக்கப்பட்ட இராணுவ மற்றும் கடற்படை தளபதிகளுக்கு பிரதமர் ஹரினி வாழ்த்து

இலங்கை இராணுவத்தின் புதிய இராணுவ தளபதியான லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ அவர்கள் இன்று (16) முற்பகல் பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை சந்தித்தார்.

இராணுவ தளபதியாக நியமனம் பெற்றதன் பின்னர் லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ மற்றும் பிரதமருக்கிடையில் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இதுவாகும்.

புதிய இராணுவ தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் லசந்த றொட்றிகோ அவர்களுக்கு பிரதமர் தனது வாழ்த்துக்களை இதன்போது தெரிவித்தார்.

26வது கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்டதன் பின்னர் வைஸ் எட்மிரல் காஞ்சன பானகொட மற்றும் பிரதமருக்கிடையில் இடம்பெற்ற முதலாவது உத்தியோகபூர்வ சந்திப்பு இன்று (16) பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்றது.

புதிய கடற்படை தளபதியாக நியமிக்கப்பட்ட வைஸ் எட்மிரல் காஞ்சன பானகொட அவர்களுக்கு பிரதமர் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

-பிரதமர் ஊடக பிரிவு

Related posts

அனுரவிற்கு பகிரங்க சவால் விடுத்த திலித் ஜயவீர!

மத்திய வங்கி ஆளுநரிடமிருந்து நாளை விசேட அறிவிப்பு

ஜனாதிபதி தலைமையில் நீர்ப்பாசன செழிப்பு தேசிய திட்டம் ஆரம்பம்