உள்நாடு

புதிதாக அங்கீகரிக்கப்பட்ட ஏழு அரசியல் கட்சிகள் விபரங்கள் இதோ !

(UTV | கொழும்பு) –     நாட்டில் இதுவரை 79 அரசியல் கட்சிகள் உள்ள நிலையில் தற்போது புதிதாக 07 அரசியல் கட்சிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி தற்போது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளது.

2022ஆம் ஆண்டின் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியாக கருதுவதற்காக விண்ணப்பங்களைச் சமர்ப்பித்த அமைப்புகளில் குறித்த 7 அரசியல் கட்சிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளதாக, தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய கடந்த நவம்பர் 28ஆம் திகதி கூடிய தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்ட முடிவு எடுத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது.

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஏழு அரசியல் கட்சிகள் பின்வருமாறு

1. ஐக்கிய காங்கிரஸ் கட்சி
2. இரண்டாவது தலைமுறை
3.ஐக்கிய காங்கிரஸ் கட்சி
4. நாட்டுப்பற்றாளர் ஐக்கிய தேசியக் கட்சி
5. மக்கள் அறிவுசார் முன்னணி
6. ஈரோஸ் ஜனநாயக முன்னணி
7. ஜனநாயக மக்கள் காங்கிரஸ்

 

Related posts

யாழ்ப்பாணத்தில் விபச்சார வீடு முற்றுகை – நால்வர் கைது

இன்றும் மழையுடனான காலநிலை

தந்தை ஜனாதிபதியானால் மகனால் ஜனாதிபதியாக முடியுமா – நாமல்.