வகைப்படுத்தப்படாத

புட்டினுடனான சந்திப்பு இன்று!

ரஷிய ஜனாதிபதி புடினும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் முதல் முறையாக இன்று ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகரில் சந்தித்து பேச உள்ளனர். இதற்காக வடகொரிய தலைவர் கிம் ஜாங் தனது சிறப்பு ரயில் மூலம் சுமார் 9 மணிநேரம் பயணித்து நேற்று (ரஷியா நேரப்படி சுமார் 11 மணியளவில்) விளாடிவோஸ்டோக் நகரை வந்தடைந்தார்.

அந்நிலையில், ரஷிய அதிபர்புடின் இன்று விளாடிவோஸ்டோக் நகருக்கு வந்து சேர்ந்தார். தூர கிழக்கு மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் இரு தலைவர்களும் சந்தித்து பேச உள்ளனர். இந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக முக்கிய பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மேலும், கொரிய தீபகற்பத்தில் நிலவும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது தொடர்பாகவும் இரு தலைவர்களும் விரிவாக ஆலோசனை நடத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

க.பொ.உயர்தர பரீட்சைக்கான அனுமதி அட்டைகள்

இன்று பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவின் பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்பு

இன்றும் மழை