சூடான செய்திகள் 1

புகையிரதத்துடன் மோதி இத்தாலி பிரஜை உயிரிழப்பு

(UTV|COLOMBO)-கல்கிஸ்ஸ பிரதேசத்தில் புகையிரதத்துடன் மோதிய வௌிநாட்டுப் பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

புகையிரத வீதிக்கு குறுக்காக சென்ற குறித்த நபர் அளுத்கமயில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பரிசோதனை புகையிரதத்துடன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து படுகாயமடைந்த நபரை களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார்.

67 வயதுடைய இத்தாலி நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சடலம் களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

நீர் மின் உற்பத்தி அதிகரிப்பு

கொரோனா தொற்றாளர்கள் எவரும் தீவிர சிகிச்சை பிரிவில் இல்லை

மொபைல் மர ஆலைகளுக்கு வருகிறது தடை