சூடான செய்திகள் 1

புகையிரதத்தில் இருந்து குதித்து ஒருவர் தற்கொலை

(UTV|COLOMBO) கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொன்டாவில் பகுதியில் நேற்று (19) மாலை 6.30 மணியளவில் கொழும்பில் இருந்து பயணித்த இரவு நேர தபால் புகையிரத்தில் குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சுன்னாகம் பகுதியை சேர்ந்த 49 வயதுடைய மரியாலின் சகாயநேசன் எனும் நபரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

 

 

Related posts

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முழுமையான இலவச சுகாதாரத் சேவை

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு முன்னால் அமைதியின்மை

மீண்டும் ஆரம்பிக்கப்பட உள்ள ரயில் பொதி சேவை