சூடான செய்திகள் 1

புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு

(UTV|COLOMBO)-புகையிரதம்  தடம்புரண்டதால் பாதிக்கப்பட்டிருந்த மலையக புகையிரத சேவைகள் மீண்டும் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத தட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

நேற்று மாலை 5.30 மணியளவில் தடம்புரண்ட புகையிரதம் இன்று அதிகாலை 2.30 மணியளவில் மீண்டும் தடமேற்றப்பட்டுள்ளது.

கொழும்பு – கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே புகையிரதம், பண்டாரவளை மற்றும் கினிகம புகையிரத  நிலையங்களுக்கு இடையே பிங்கேய பகுதியில் தடம்புரண்டது.

இதனால் பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி பயணிக்க விருந்த இரவு நேர அஞ்சல் புகையிரதம் இரத்து செய்யப்பட்டதாக தொடரூந்து கட்டுப்பாட்டு அறை மேலும் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

நலின் ருவன்ஜீவ பெர்ணான்டோ பிணையில் விடுதலை

UPDATE-ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளது

நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு