பிலிப்பைன்ஸ் நாட்டில் நீண்டகால சுயாட்சிப் போராட்டத்தின் பின்னர் தங்களுக்கான சமாதான தீர்வுவை எட்டுவதில் குறிப்பிடத்தக்க அரசியல் பரிமாணத்தை அடைந்துள்ள முஸ்லிம் மின்டானோ பங்சமோரோ தன்னாட்சி பிராந்தியத்திலிருந்து தற்போது இலங்கைகக்கு விஜயம் செய்துள்ள அரசியல் பிரதிநிதிகள் அடங்கிய தூதுக் குழுவினர் வியாழக்கிழமை (23) பாராளுமன்றத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் கட்சியின் பிரதித்தலைவர் கலாநிதி எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புழ்ழாஹ் மற்றும் ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்களுடன் நீண்ட நேரம் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இலங்கையைப் பொறுத்தவரை போருக்குப் பிந்திய இனப் பிரச்சினைத் தீர்வுக்கான முன்னெடுப்புகள், இந்நாட்டின் அரசியல் அமைப்பு, தேர்தல் முறைமை, நிர்வாகக் கட்டமைப்பு போன்றவை தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டது.