உள்நாடு

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி இலங்கைக்கு

(UTV | கொழும்பு) – பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டியுட்ரஸ் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கொவிட் பெருந்தொற்று நிலைமை முடிவுக்கு வந்ததும் இலங்கைக்கு விஜயம் செய்ய திட்டமிட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியுடன் தொலைபேசியில் உரையாடிய போது, நாட்டுக்கு விஜயம் செய்யுமாறு அழைப்பு விடுத்திருந்தார்.

பிலிப்பைன்ஸ் இலங்கை நாடுகளுக்கு இடையிலான ராஜதந்திர உறவுகளுக்கு இந்த ஆண்டுடன் அறுபது ஆண்டுகள் பூர்த்தியாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மற்றுமொரு ஹெரோய் தொகையுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

இன்றைய வானிலை (Weather Update)

எல்பிட்டிய தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று

editor