உலகம்

பிரேசில் கோழி இறைச்சியில் கொரோனா உறுதி

(UTV | பிரேசில்) – கோழி இறைச்சி மற்றும் கடலுணவுகளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சீன அரசு தெரிவித்துள்ளதாக பிரபல சர்வதேச செய்தித் தளமான ரொய்டர்‘ செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது.

பிரேசில் நாட்டின் மூன்றாவது பெரிய இறைச்சி உற்பத்தி நிறுவனமான ‘அரோரா’ (Aurora) நிறுவனத்திற்கு சொந்தமான ஆலையில், கோழி, பன்றி மற்றும் கோழியின் சிறகுகளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சீன நகரமான ஷென்சென் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பிரேஸில் நாட்டிலிருந்து சீனாவின் சென்சன் பகுதிக்கு ஏற்றுமதி செய்யப்பட்ட குளிரூட்டப்பட்ட கோழி இறைச்சியிலேயே கொரோனா தொற்று இருப்பது சீன அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டிருக்கின்றமை இறைச்சி ஏற்றுமதி வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக உள்ளதோடு பெரும் அதிர்ச்சியாகவும் உள்ளது.

அதேபோல ஈக்குவாடோரிலிருந்து சீனாவினால் பெற்றுக் கொள்ளப்பட்ட கடலுணவுகளிலும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜூலை முதல் பொது வெளியில் முகக் கவசம் அணிவது கட்டாயம் இல்லை

காசா போருக்கு எதிராக ஜோர்டான், துருக்கி, துனீசியாவில் வெடித்த போராட்டங்கள்!

உலக சுகாதார நிறுவனத்திலிருந்து விலகுகிறது அமெரிக்கா