உள்நாடு

பிரியந்த குமாரவின் சடலத்துடனான விமானம் இன்று மாலை இலங்கைக்கு

(UTV | கொழும்பு) –  பாகிஸ்தானில் படுகொலை செய்யப்பட்ட பிரியந்த குமாரவின் சடலம் இலங்கைக்கு இன்று எடுத்து வரப்படவுள்ளது.

அவரது சடலம் ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யூ.எல் 186 என்ற விமானத்தின் ஊடாக இன்று எடுத்து வரப்படவுள்ளது.

அதனடிப்படையில் குறித்த விமானம் லாஹூரில் இருந்து பிற்பகல் 12.30 மணிக்கு வௌியாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விமானம் மாலை 5 மணி அளவில் இலங்கையை வந்தடையும் என வௌிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

முஸ்லிம் விவாக – விவாகரத்து சட்டத்தை மீள் திருத்துமாறு பிரேரணை

கொரொனோ : பாராளுமன்றத்தை உடனடியாக கூட்ட கோரிக்கை

அரசியல் பழிவாங்கல் – இன்று முதல் சாட்சியம் பெறும் நடவடிக்கை ஆரம்பம்