உள்நாடு

பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை

(UTV | கொழும்பு) – பாகிஸ்தானில் கடந்த வெள்ளிக்கிழமை (03) கொடூரமாக தாக்கப்பட்டு எரியூட்டப்பட்டு படுகொலை செய்யப்பட்ட இலங்கையரான பிரியந்த குமாரவின் இறுதிக் கிரியை நாளை (08) நடைபெறவுள்ளது.

கனேமுல்லையில் உள்ள அவரது இல்லத்தில் அவரது பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம் அவரது பூதவுடல் நேற்று (06) பிற்பகல் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டு பிரேத பரிசோதனைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

சிக்கலான சவாலை எதிர்கொள்ள போகும் வட மாகாண சுகாதாரத்துறை!

வாழைப்பழங்கள் விலை அதிகரிப்பு

தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழி பீட சர்வதேச ஆய்வரங்கு ஒத்திவைப்பு!