வகைப்படுத்தப்படாத

பிரான்ஸ் போராட்டம் ; 1700 பேர் கைது…

(UTV|FRANCE)-அத்துடன் போராட்டம் காரணமாக  179 பேர் கயமடைந்தும் உள்ளனர்.

பிரான்ஸில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கடந்த முதலாம் திகதி முதல் பிரான்ஸில் பாரிஸ் உட்பட பல்வேறு நகரங்களில் மஞ்சல் உடை அணிந்து போராட்டக்காரர்கள் போரட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

அத்துடன் இதன் காரணமாக அப் பகுதியில் ஏராளமான பொருட் சேதங்களும் பதிவாகியுள்ளன.

இதையடுத்து எரிபொருள் உயர்வை நிறுத்தி வைப்பதாக பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான் அறிவித்தார். எனினும், இதற்கு உடன்படதா ஆர்ப்பாட்டக்காரர்கள் மேலும் பல கோரிக்கையை விடுத்து தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந் நிலையில் பிரான்ஸின் புகழ்பெற்ற சுற்றுலா தலமான ஈபிள் டவர், அருங்காட்சியகங்கள், கடைகள் உள்ளிட்டவை மூடப்படட்டன. ஏற்படும் அசம்பாவிதங்களை தடுக்க பிரான்ஸில் மாத்திரரம் சுமார் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொலிஸார் குவிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்தை ஒருக்க பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியதுடன், தண்ணீர் பிரயோகமும் மேற்கொண்டனர். அப்போது பொலிஸார் மீது போராட்டக்காரர்கள் கற்களை வீதி தாக்கினர். இதனால் இரு தரப்புக்குமிடையே கடுமையான மோதல் இடம்பெற்றது. இதில் 179 பேர் காயமடைந்தனர்.

நள்ளிரவு முழுவதும் நீடித்த இந்த போராட்டத்தினால் இதில் ஈடுபட்ட 1700 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

 

 

 

 

 

 

 

 

 

Related posts

சூரத் நகரில் திடீர் தீ விபத்து-20 பேர் பலி

Murray and Williams wow Wimbledon again to reach last 16

வடக்கிற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி!