உலகம்

பிரான்சில் ஜூலை வரை மருத்துவ அவசரநிலை நீடிப்பு

(UTV|கொழும்பு) – கொரோனா வைரஸ் காரணமாக பிரான்ஸ் நாட்டில் ஜூலை 24 ஆம் திகதி வரை மருத்துவ அவசரநிலை நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவியுள்ள நிலையில், ஐரோப்பிய நாடான பிரான்சில் 168,693 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 24,895 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் தாக்கம் தீவிரமடைந்த நாள் முதல் அங்கு மருத்துவ அவசர நிலை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் நாடு முழுவதும் அமுலில் உள்ள மருத்துவ அவசரநிலை ஜூலை மாதம் 24-ம் திகதி வரை நீடித்து பிரான்ஸ் அரசு உத்தரவிட்டுள்ளது.

Related posts

கூட்ட நெரிசலில் சிக்கி 15 பேர் பலி

கொரோனா வைரஸ் காரணமாக சந்திரப் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இரத்து

இந்தியாவிலும் பலி எண்ணிக்கை அதிகரிப்பு