கேளிக்கை

பிரபல நட்சத்திர தம்பதியை ஒன்று சேர்த்த கொரோனா

(UTV|கொழும்பு) – விவாகரத்து பெற்று பிரிந்த ஹிந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷனும், ஆடை வடிவமைப்பாளர் சுசேன்னாவும் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.

ஹிருத்திக் ரோஷன்-சுசேன்னா தம்பதிக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். கருத்து வேறுபாடு காரணமாக 2014-ல் விவாகரத்து செய்து பிரிந்தார்கள்.

மகன்கள் ஹிருத்திக் ரோஷனுடன் வசித்து வருகிற நிலையில், உலகம் முழுவதும் பரவிவரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

இதனை கட்டுப்படுத்த இந்தியா முழவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளியில் வராமல் அனைவரும் வீட்டிலேயே இருக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொரோனா ஊரடங்கு காரணமாக மகன்கள் வீட்டில் தனிமையில் முடங்கி கஷ்டப்பட கூடாது என்பதற்காக ஹிருத்திக் ரோஷனின் வீட்டுக்கு வந்து மகன்களுக்கு துணையாக இருக்கிறார் சுசேன்னா.

அவர் தனது புகைப்படத்தை ஹிருத்திக் ரோஷன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு, “நாட்டில் ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில், எனது முன்னாள் மனைவி சுசேன்னா எங்கள் குழந்தைகளுக்காக தானாக முன்வந்து எனது வீட்டில் தங்கி இருக்கிறார். அவருக்கு நன்றி” என்று பதிவிட்டுள்ளார்.

Related posts

மிஸ் இந்தியா 2018 பட்டம் வென்ற மாணவி

சாவித்திரியின் வாழ்க்கை படத்தால் பிரிந்தது குடும்பம்

ஆஸ்கர் விருது விழாவில் கிறிஸ் ராக்கை ‘பளார்’ என அறைந்த வில் ஸ்மித் [VIDEO]