கேளிக்கை

பிரபல நடிகைக்கு பெண் குழந்தை

(UTV|இந்தியா) – நடிகை சினேகா, நடிகர் பிரசன்னா தம்பதியருக்கு இன்று அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல நடிகையான சினேகா நடிகர் பிரசன்னாவை 2012ல் காதல் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு 2015ல் அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு விஹான் என்று பெயர் சூட்டினார்கள்.

இந்நிலையில் இரண்டாம் முறையாக கர்ப்பம் தரித்த நடிகை சினேகாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து, இன்று நடிகை சினேகாவுக்கு இரண்டாவதாக அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவரது கணவர் நடிகர் தனது ட்விட்டர் பக்கதில் அறிவித்துள்ளார்

Related posts

உலகமே ஆவலுடன் எதிர்ப்பார்த்த மிரட்டும் Jurassic World: Fallen Kingdom ட்ரைலர் இதோ

‘இரும்புத்திரை’ படத்திலிருந்து இல்லாமல் போன காட்சி இதோ….(VIDEO)

ரஜினியை நேரில் சந்தித்த குத்துச்சண்டை வீராங்கனை