பிரதியமைச்சர் சுனில் வட்டகல தனது சாரதியை கழுதை என கூறியது பிழையான செயல் என சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்
நேற்று புதன்கிழமை (19) புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு சென்றிருந்த பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகார பிரதியமைச்சர் சுனில் வட்டகல, அவரது வாகன சாரதியை கழுதை என அழைத்தார்.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் இயலுமையை சில ஊடகவியலாளர்கள் கேள்விக்குட்படுத்தியபோதே, சத்தமாக வட்டகல கழுதை இங்கே வா எனக் கத்தியுள்ளார்.