சூடான செய்திகள் 1

பிரதமர் பரிசுத்த பாப்பரசரின் பிரதிநிதியை சந்தித்தார்

(UTV|COLOMBO) கொழும்பு பௌத்தாலோக மாவத்தையில் அமைந்துள்ள வத்திக்கான் தூதரகத்தின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று பிற்பகல் பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஆண்டகையின் விசேட பிரதிநிதி வத்திக்கானின் கார்டினல் வணக்கத்திற்குரிய பெர்னாண்டோ பினோலி ஆண்டகைக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையிலான விசேட சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

உயிர்த்த ஞாயிறு தின வெடிப்புச் சம்பவம் குறித்தும் நாட்டின் எதிர்கால வேலைத்திட்டங்கள் குறித்தும் அங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டது. இந்த சந்திப்பில் கொழும்பு மறை மாவட்ட பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும், இலங்கைக்கான வத்திக்கான் தூதுவர் பேராயர் பியரே சுயன்வன் ட்டொட்டும் கலந்து கொண்டனர்.

 

Related posts

இடியுடன் கூடிய மழை

நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு

சமூக ஊடக வலைதளங்களுக்கு புதிய சட்டமூல வரைபு