உள்நாடுசூடான செய்திகள் 1

பிரதமர் தலைமையில் நாளை விஷேட கலந்துரையாடல்

(UTV | கொழும்பு) – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும், கடந்த பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்திய உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் நாளை(04) இடம்பெறவுள்ளது.

அத்துடன் குறித்த சந்திப்பில் 2015ஆம் ஆண்டுக்கு முன் பாராளுமன்றத்தை பிரிதிநிதித்துவப்படுத்திய சில உறுப்பினர்களும் கலந்து கொள்ள உள்ளனர் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் பங்கேற்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பன அறிவித்துள்ளன.

எனினும், குறித்த சந்திப்பில் பங்கேற்பதில்லை என ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஜே.வி.பி என்பன அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் பலத்த மழை…

மீண்டும் சிங்கள- முஸ்லிம் இன மோதல்? சம்பிக்கவின் எதிர்வுகூறல்

காதலர் தினம் : இணையவழி மோசடிகள் அதிகரிக்க வாய்ப்பு [VIDEO]