வகைப்படுத்தப்படாத

பிரதமர் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழு கலைக்கப்பட்டது

(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்துச்செய்துள்ளார்.

ஜனாதிபதி தலைமையில் நேற்று ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொருளாதார முகாமைத்துவ குழுவால் கடந்த காலத்தில் நாட்டிற்கு பயனுள்ள எந்த செயற்பாடுகளும் இடம்பெறவில்லை என தெரிவித்து ஜனாதிபதியால் அந்த குழுவை ரத்துச்செய்ய இரண்டு அமைச்சரவை பத்திரங்கள் இதற்கு முன்னர் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.

இந்த குழுவை தொடர்ந்து பராமரித்துச் செல்ல வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அமைச்சரவை கூட்டத்தில் தெரிவித்திருந்த போதும் , ஜனாதிபதி பொருளாதார முகாமைத்துவ குழுவை ரத்துச்செய்வதாக அறிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஜப்பான் பிரதமரை சந்தித்தார் ஜனாதிபதி

Special form directed at Sri Lanka arrivals called ‘racist’ – [IMAGES]

Ireland bowled out for 38 as England surge to victory