சூடான செய்திகள் 1

பிரதமர் தலைமையிலான குழுவினர் காங்கேசன்துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்

(UTV|COLOMBO) துறை முக அபிவிருத்தி தொடர்பில் ஆராய பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சர்கள் அடங்கிய குழுவினர் நேற்று(14) வியாழக்கிழமை காங்கேசன் துறை துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்.

காங்கேசன்துறை முகத்தை அபிவிருத்திக்கு இட்டுச் செல்லும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றிஷாட் பதியுதீன், துறை முகங்கள் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க, துறை முகங்கள் மற்றும் கப்பல் துறை பிரதியமைச்சர் அப்துல்லாஹ் மஹ்ரூப் . ஆகியோர்களின் பங்கேற்புடன் குறித்த விஜயமொன்றை பிரதமர் மேற்கொண்டிருந்தார்.

புதிய திட்டமொன்றினை மேற்கொண்டு எதிர்கால துறை முக அபிவிருத்திகள் தொடர்பில் பிரதமர் இதன் போது கேட்டறிந்து கொண்டார்.

இவ் விஜயத்தில் அமைச்சர்களான ராஜித சேனாரட்ண, பீ.ஹரிசன், வஜிர அபேவர்தன, மற்றும் விஜயகலா மகேஸ்வரன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.

 

பிரதமர் தலைமையிலான குழுவினர் காங்கேசன்துறை முகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டனர்…

 

Image may contain: 8 people, people sitting and outdoor

 

 

 

 

 

Related posts

இலங்கை விமானப்படைக்கு, இந்தியா வழங்கிய விமானம்!

ஜனாதிபதிக்கு, இன்டர்போல் செயலாளர் பாராட்டு

வானிலையில் சிறிது மாற்றம்