கிசு கிசு

பிரதமருக்கு ஆதரவாகும் வாசு, வீரவன்ச மற்றும் கம்மன்பில

(UTV | கொழும்பு) –  முன்னாள் அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயேச்சைக் குழு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த குழுவினர் இன்று (16) பிரதமரை சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பின்னர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவிக்கவுள்ளதாகவும் யுடிவி இற்கு அறியக் கிடைத்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (15) சுயேச்சையான பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட எதிர்க்கட்சிக் குழுக்களுக்கு பிரதமர் தனது அரசாங்கத்தை ஆதரிக்க அழைப்பு விடுத்ததை அடுத்து இந்த தீர்மானம் எட்டப்படுவதாக அறிய முடிகிறது.

Related posts

குரலற்றவர்களின் குரலாக ‘சிமோன் பைல்ஸ்’ [முழுமையான கதை]

இணையத்தில் ட்ரெண்டிங் ஆகும் ப்ரியங்கா சோப்ராவின் புகைப்படம் உள்ளே…

அலரி மாளிகைக்குள் ஆயுத களஞ்சியங்கள்-அதன் பாதுகாப்பு ஆபத்தில்?