உள்நாடு

பிரதமரின் வெசாக் தின வாழ்த்துச் செய்தி

(UTV | கொழும்பு) – இலங்கையைப் போன்றே முழு உலகும் கொரோனா தொற்றுநோயின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள நிலையிலேயே இம்முறை புத்தபெருமானின் பிறப்பு, புத்தர் நிலை, பரிநிர்வாணம் இடம்பெற்ற வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டியேற்பட்டுள்ளது.

கடுமையான அர்ப்பணிப்பு, பொறுமை மற்றும் பௌத்தருக்கே உரித்தான மன அமைதியுடன் செயற்பட்டமையினால் இலங்கை வாழ் மக்களை அந்தத் தொற்றுநோயிலிருந்து வெற்றிகரமாக மீட்டெடுப்பதற்கான நேரம் மிகவும் அண்மித்துள்ளது.

எனவே, நாம் தொற்றுநோயிலிருந்து மீட்டெடுப்பதற்காக மேற்கொண்ட போராட்டத்தின் வெற்றி பாதுகாக்கப்படும் வகையிலேயே வெசாக் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தனது வெசாக் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Related posts

தவறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

எதிர்க்கட்சிகள் அதிகாரத்தைப் பெறுவதற்கான சிறந்த வழி அரசாங்கத்துடன் ஒன்றிணைவதாகும்

2024 ஆம் ஆண்டில் புதிய விளையாட்டு பல்கலைக்கழகத்திற்கான திட்டங்கள் – ரோஹன திசாநாயக்க.