சூடான செய்திகள் 1

பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொழுது சமநிலையுடன் செயற்படவேண்டும் – மஹிந்த தேசப்பிரிய

(UTV|COLOMBO) – எல்பிட்டிய தேர்தலின் வாக்களிப்பு உயர்ந்த மட்டத்தில் காணப்பட்டதாகவும் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பு வீதம் 80 தொடக்கம் 85 சதவீதமாக அமையக்கூடும் என்றும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தேர்தல் செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊடக நிறுவனம் ஒரு கட்சிக்காக பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பில் அந்த குறிப்பிட்ட நிறுவனத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்படும் எனவும் இது தொடர்பில் அரச ஊடக நிறுவனங்கள் உரிய வகையில் செயற்படாத பட்சத்தில் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரச ஊடக நிறுவனத்தை முறைகேடு எச்சரிக்கை என்றும் அவர் தெரிவித்தார். அரச ஊடக நிறுவனங்கள் உரிய முறையில் செயற்படாவிட்டால் சிவில் அமைப்புக்கள் மற்றும் சில பிரஜைகள் அது தொடர்பில் வழக்கு தொடர்வதற்கு திட்டமிட்டிருப்பதாக தமக்கு அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் சில ஊடக நிறுவனங்களினால் மேற்கொள்ளப்படும் செய்தி ஒலிபரப்பு காலப்பகுதிக்குள் ஒதுக்கப்படும் அலைவரிசைக் காலம் தொடர்பிலும் அறிக்கை ஒன்றை வாராந்தம் சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனங்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பிரச்சாரங்களை மேற்கொள்ளும் பொழுது சமநிலையுடன் செயற்படவேண்டும் என்று தனியார் ஊடகங்களை தாம் மீண்டும் கேட்டுக்கொள்வதாகவும் அவர் தெரிவித்தார்.

உண்மைக்கு புறம்பான செய்திகளை வெளியிடுதல், வேட்பாளர்களை சிரமத்திற்கு உள்ளாக்குதல் மற்றும் தனிப்பட்ட தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் செய்திகளை வெளியிடுவது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

விடுமுறை நாட்களில் விசேட ரயில் சேவை

பொதுச் செயலாளராக ரஞ்சித் மத்தும பண்டார நியமனம்

“ஒற்றுமையின் மூலம் சமூகத்திற்கெதிரான சதிகளை முறியடிப்போம்” மாவடிப்பள்ளியில் அமைச்சர் ரிஷாட்!