வகைப்படுத்தப்படாத

பிஜி தீவு அருகே கடுமையான நிலநடுக்கம்…

தெற்கு பசிபிக் கடலில் அமைந்துள்ள பிஜி தீவு அருகே இன்று காலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 6.2 ஆக பதிவாகி உள்ளது.

இந்நிலநடுக்கத்தினை தொடர்ந்து மற்றொரு சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது 5.2 ஆக பதிவானது. இந்த இரு நிலநடுக்கங்களும் தீவுக்கு தெற்கே பிஜி மற்றும் டோங்கா ஆகிய பகுதிகளுக்கு இடையே ஏற்பட்டு உள்ளது. இது 500 கிலோ மீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளது.

ஆனால் இந்நிலநடுக்கத்தினால் சுனாமி எச்சரிக்கை எதனையும் பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் வெளியிடவில்லை. இதனால் ஏற்பட்ட பொருட்சேதங்கள் பற்றிய விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

Related posts

කිලිනොච්චි අනතුරකින් දෙදෙනෙකු මරුට

கீதாவின் மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம் இன்று வழங்கிய அதிரடி உத்தரவு!

காளான் சாப்பிட்டு 4 பேர் உயிரிழப்பு