உள்நாடுவணிகம்

பால்மாவின் விலையை அதிகரிக்குமாறு பால்மா நிறுவனங்கள் கோரிக்கை

(UTV | கொழும்பு) – இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு பால்மா நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை ஒன்றினை முன்வைத்துள்ளனர்.

டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சி அடைந்துள்ளமையினால் ஏற்பட்டுள்ள நட்டத்தை தவிர்ப்பதற்காக குறித்த கோரிக்கை முன்வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பால்மா நிறுவனங்களின் கோரிக்கைக்கு அனுமதி வழங்கப்படவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் தலைவர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திஸாநாயக்க தெரிவித்திருந்தார்.

Related posts

பெப்ரவரி மாதமளவில் உரப்பிரச்சினைக்கு முழுமையாக தீர்வு

மேலும் 366 பேர் மீண்டனர்

இலங்கை பிரதமர் – இந்திய பிரதமருக்கும் இடையில் கலந்துரையாடல்