உலகம்

பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் – கமலா ஹாரிஸ்.

(UTV | கொழும்பு) –

இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும் என அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தெரிவித்தார். அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டனில் உள்ள தனது அரசு இல்லத்தில் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். கமலா ஹாரிஸ் விடுத்த அழைப்பின் பேரில் 300 க்கும் அதிகமான விருந்தினர்கள் இந்த தீபாவளி கொண்டாட்டத்தில் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் இந்திய வம்சாவளியினர்.

அப்போது பேசிய கமலா ஹாரிஸ், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நடைபெறும் சூழலில், உலகம் எதிர்கொண்டிருக்கும் இருண்ட மற்றும் கடினமான நிலைக்கு ஒளி ஏற்படுத்தும் வகையில் தீபங்களின் பண்டிகையான தீபாவளியைக் கொண்டாடுவது முக்கியம். இருளை விலக்கி ஒளியை ஏற்படுத்துவதாக இந்த தீபாவளி அமையட்டும். பாலஸ்தீனத்தில் மக்கள் அடைந்து வரும் துயரம் மாற வேண்டும். அதே நேரம், இஸ்ரேல் தன்னை தற்காத்துக்கொள்ள எடுக்கும் நடவடிக்கையை அமெரிக்கா ஆதரிக்கும் என தெரிவித்தார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

ஈரான் குலுங்கியது

பூஸ்டர் டோஸ் என்பது ஒரு ஊழல் – WHO

உலகளவில் பலி எண்ணிக்கை 27 ஆயிரத்தை தாண்டியது