சூடான செய்திகள் 1

பாராளுமன்றம் இன்று(27) கூடுகிறது

(UTV|COLOMBO)-பாராளுமன்றம் இன்று (27) கூடவுள்ளது.

இன்றைய தினமும் பொதுமக்கள் கெலரி மற்றும் விசேட அதிதிகளுக்காக கெலரி ஆகியன மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், பாராளுமன்ற அமர்வில் கலந்துகொள்வதா இல்லையா என்பது தொடர்பில் இதுவரை  தீர்மானிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இன்று காலை கூடவுள்ள ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கிடையிலான சந்திப்பில், இது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.

இன்று காலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டம் நடைபெறவுள்ளதாகவும்
ஆளும் கட்சி என்ற வகையில் எதிர்காலத்தில் எவ்வாறு செயற்பட வேண்டும் என்பது தொடர்பில் நாம் இன்று தீர்மானிக்கவுள்ளதாகவும் பா.உ. சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத பாராளுமன்ற அமர்வு, அத்துடன் நாம் ஏற்றுக்கொள்ளாத ஐக்கிய தேசிய கட்சியின் சபாநாயகரின் செயற்பாடுகளுக்கு நாம் எதிர்ப்புத் தெரிவிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற அமர்வு தொடர்பில் ஐக்கிய தேசிய கட்சி இன்றைய பாராளுமன்ற அமர்வில் தாம் பங்கேற்கவுள்ளதாக லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், கடந்த பாராளுமன்ற அமர்வில் ஏற்பட்ட குழப்பநிலை தொடர்பில், பாராளுமன்ற நிர்வாகத்தினர் உள்ளிட்ட 20 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்களில் பொலிஸ் அதிகாரிகள் சிலரிடமும் வாக்குமூலம் பதிவு செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ், அத்தியட்சகர் ருவன் குணசேகர குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பாராளுமன்ற பாதுகாப்பிற்காக பொலிஸ் விசேட அதிரடி படையினர் கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.

 

 

 

 

 

Related posts

கிழக்கு நிருவாக பிரச்சினை: ஜனாதிபதிக்கு தக்க பதிலடி வழங்கப்படும் – இம்றான் மஹ்ரூப்

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் மூவர் அடையாளம்

தமிழ், சிங்கள புதுவருடத்திற்கான பஞ்சாங்கம் ஜனாதிபதியிடம் கையளிப்பு