சூடான செய்திகள் 1

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் குறித்து ஆராயும் குழு நாளை(12) கூடவுள்ளது…

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட குழு நாளை (12) முதல் தடவையாக கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட மோதல் குறித்து விசாரிக்க சபாநாயகர் கரு ஜயசூரியவினால் குழு ஒன்று நியமிக்கப்பட்டது.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இக் குழுவில், சமல் ராஜபக்ஷ, ரஞ்சித் மத்தும பண்டார, சந்திரசிறி கஜதீர, பிமல் ரத்னாயக மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோர் உள்ளடங்கியுள்ளனர்.

பாராளுமன்றத்தில் நவம்பர் 14, 15 மற்றும் 16 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல்களால், பாராளுமன்றத்தின் சொத்துகள் பல சேதமடைந்ததுடன் சுமார் 260,000 ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் பாராளுமன்றத்தில் நாளை (12) காலை 10.00 மணி அளவில் இந்த விடயம் குறித்த ஆராயப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கு அமைய நாளை தினம் எரிபொருள் விலை அதிகரிப்பு?

மருந்து வகைகளுக்கான தட்டுப்பாடு ஜனவரி மாதம் தீர்க்கப்படும்-அமைச்சர் ராஜித

அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்வதாக அறிவிப்பு?