அரசியல்உள்நாடு

பாராளுமன்றத் தேர்தல் – கட்டுப்பணம் செலுத்திய முதல் சுயேட்சைக் குழு

பாராளுமன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக சுயேட்சைக் குழுவொன்று கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளனர்.

இவ்வருட பொதுத் தேர்தலுக்காக கட்டுப்பணம் செலுத்தும் முதலாவது குழு இதுவாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகள், உதவி தேர்தல் ஆணையாளர்கள் மற்றும் பிரதி ஆணையாளர்களுக்கிடையிலான கலந்துரையாடல் இன்று தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டது.

பாராளுமன்ற தேர்தல் செலவு குறித்து இறுதி உடன்பாடு எட்டப்படும் என்று கூறப்படுகிறது.

பாராளுமன்றத் தேர்தலுக்காக 11 பில்லியன் ரூபா செலவிடப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

2021வரவு செலவுத்திட்டம் – வாக்கெடுப்பு இன்று

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் வேட்பாளராக களமிறங்குவாா் -அமைச்சர் பிரசன்ன

காணி அளவீடு தொடர்பில் ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை