சூடான செய்திகள் 1

பாராளுமன்றக் குழப்பநிலை அறிக்கை பிற்போடப்பட்டது

(UTV|COLOMBO) பாராளுமன்றத்தில் அண்மையில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தின் போது முறைகேடாக நடந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பிலான விசாரணை குழுவின் அறிக்கை நாளை மறுதினம் (22) பாராளுமன்ற சபை அமர்வில் முன்வைக்கவுள்ளதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த நவம்பர் மாதம் 15,16,17 ஆகிய தினங்களில் பாராளுமன்றத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவத்துடன் தொடர்புடைய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுக்க சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்ற சிறப்புரிமைகள் குழு ஒன்றினை நியமித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மன்னம்பிட்டில் பாலத்தில் குடும்பத்திற்கு 1 இலட்சம்!

கொழும்பு – லோட்டஸ் வீதிக்கு பூட்டு

நீதியரசர்கள் சற்றுமுன்னர் வருகை தந்தனர்