சூடான செய்திகள் 1

பாராளுமன்ற மோதல் நிலை-எதிர்வரும் 12ம் திகதி சபாநாயகரிடம்

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் அண்மையில் ஏற்பட்ட மோதல் நிலை தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பாராளுமன்ற குழுவின் அறிக்கை எதிர்வரும் 12ம் திகதி சபாநாயகரிடம் ஒப்படைக்கப்படும் என அக்குழுவின் தலைவர் பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கை அடுத்தகட்ட நடவடிக்கைகளுக்காக சபாநாயகரினால் சட்ட மா அதிபருக்கு கையளிக்கப்படும் எனவும் சட்ட மா அதிபரிடம் கையளிப்பதற்கு முன்னர் அது தொடர்பிலான பிரேரணை ஒன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் எனவும் பிரதி சபாநாயகர் தெரிவித்துள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் 14, 15, 16ம் திகதிகளில் பாராளுமன்றத்தில் குழப்பநிலை ஏற்பட்டதுடன் குறித்த பிரச்சினைகள் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் காயங்களுக்குள்ளானதுடன் பாராளுமன்ற சொத்துக்களுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் அறுவர் கைது

மின்னல் தாக்கி பலியானவர்களின் குடும்பங்களிற்கு இழப்பீடு

”பிடிக்காவிட்டால் வெளியேறவும்” அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்த ஜனாதிபதி