அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தல் – வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு

பாராளுமன்றத் தேர்தலில் தமக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிக்கும் வாக்காளருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உணர்ந்தால் அவரது கோரிக்கைக்கு இணங்க வேறொரு வாக்குச் சாவடியில் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் 127ஆ ஆம் பிரிவின் கீழ் தமக்கென ஒதுக்கப்பட்டிருக்கும் வாக்கெடுப்பு நிலையத்தில் தனது வாக்கையளிக்க முடியாதிருக்கும் என்று நியாயமாகப் பயப்படுகின்ற வாக்காளர்கள், வேறொரு வாக்கெடுப்பு நிலையத்தில் வாக்களிப்பதற்கு அனுமதியளிக்கும்படி வேண்டுகோள் ஒன்றை விடுக்க முடியும் என்றும், அதற்கிணங்க அத்தேருநர்கள் வாக்குகளையளிப்பதற்காக செயற்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த முடியுமென்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

அந்த வாக்காளர்கள், அவர்களது விண்ணப்பப் பத்திரங்களை பெயர் குறித்த நியமன அறிவித்தல் திகதியிலிருந்து 07 நாட்களுக்குள், அதாவது 2024.10.01 ஆந் திகதிக்கு முன்னர், இராஜகிரிய சரண மாவத்தையிலிருக்கும் தேர்தல்கள் செயலகத்திற்கோ, தாம் வதியும் மாவட்டத்தின் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகத்திற்கோ சமர்ப்பிக்க முடியும்.

விண்ணப்பதாரர் 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பை அடிப்படையாக கொண்டு விண்ணப்பப் பத்திரங்களைப் பூரத்தி செய்தல் வேண்டும். இவ்விடாப்புக்கள் அனைத்தும் மாவட்ட செயலகங்களிலும்/ கச்சேரிகளிலும் மற்றும் மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களிலும் வைக்கப்படும்.

அத்தோடு 2024 ஆம் ஆண்டின் தேருநர் இடாப்பின் பதிவு செய்யப்பட்டுள்ள விபரங்களை www.elections.gov.lk இணையத்தளத்தினூடாக பரீட்சிக்க முடியும்.

விண்ணப்பப் பத்திரத்தில் காணப்படும் தகவல்கள் சரியானவையென விண்ணப்பதாரர் வதியும் பிரதேசத்தின் கிராம அலுவலரினால் உறுதிப்படுத்தப்பட்டிருத்தல் வேண்டும்.

விண்ணப்பப் பத்திரங்களை மாவட்டத் தேர்தல்கள் அலுவலகங்களில், இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன் www.elections.gov.lk இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யமுடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

Related posts

பொல்துவை சந்தியில் உள்ள பாராளுமன்ற நுழைவு வீதிக்கு பூட்டு

BREAKING NEWS – அர்ச்சுனா எம்.பியை கைது செய்ய உத்தரவு

editor

இராணுவத்தினரை தனிமைப்படுத்த பாடசாலைகளை பயன்படுத்தவில்லை