உள்நாடு

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளுக்கு விடுமுறை

நாடளாவிய ரீதியாக உள்ள அனைத்து அரச பாடசாலைகளும் நவம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் மூடப்படுவதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.

நவம்பர் 14ஆம் திகதி இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, இவ்வாறு மூடப்படும் பாடசாலைகள் மீண்டும் நவம்பர் 18ஆம் திகதி கல்விச் செயற்பாடுகளுக்காக திறக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, வாக்களிப்பு நிலையங்களுக்காக பயன்படுத்தப்படும் பாடசாலைகள் 12.11.2024 அன்று பாடசாலை நேரத்திற்குப் பிறகு சம்பந்தப்பட்ட கிராம அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.

வாக்களிப்பு நிலைய நடவடிக்கைகளுக்கு தேவையான மேசைகள், கதிரைகள் மற்றும் மண்டப வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் அதிபர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தேர்தல் ஆணைக்குழு தலைவரின் வேண்டுகோளுக்கு அமைவாக, வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு குறிப்பிடப்பட்ட காலத்தில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவுக்கு இலங்கை இரங்கல்

ரயில்வே அதிகார சபைக்கு ரயில்வே தொழிற்சங்க எதிர்ப்பு

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு