அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலுக்கு தயார் – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன

பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராகுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற தேர்தலை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விரிவான கலந்துரையாடல் இன்று செவ்வாய்க்கிழமை (24) நெலும் மாவத்தையில் நடைபெற்றுள்ளது.

அதில், ஜனாதிபதி தேர்தலின் போது கட்சியில் இருந்து விலகியவர்கள் மீண்டும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொள்வதா என்பது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான எவரையும் மீண்டும் சேர்க்க வேண்டாம் என்றும் கட்சி முடிவு செய்துள்ளது. அத்தோடு, முன்னதாக கட்சியில் இருந்து விலகியவர்களில் பலரை மீண்டும் இணையுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கடட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

Related posts

குறைந்த பட்சம் 3 வாரங்களுக்கு நாட்டை முடக்குமாறு பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

இந்தியவாழ் இலங்கை அகதிகளுக்கு சர்வதேச அங்கிகாரமிக்க கடவுச்சீட்டு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – மைத்திரியின் வாக்குமூலப் பதிவு 7 அல்லது 8 [VIDEO]