அரசியல்உள்நாடு

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கான விசேட அறிவித்தல்

பொதுத்தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கையை குறிப்பிட்ட திகதியில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவ்வாறு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் மீது வழக்குத் தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க மேலும் கருத்து வௌியிடுகையில்,

“பொதுத் தேர்தல் நவம்பர் 14, 2024 அன்று நடைபெற்றது. 15ஆம் தேதி முடிவு வெளியானது.

முடிவுகள் அறிவிக்கப்பட்ட 21 நாட்களுக்குள், குறித்த தேர்தலில் போட்டியிட்ட அனைத்து கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் வேட்பாளர்கள் உரிய வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்.”

“மேலும், அந்த அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் தங்களது வருமானம் மற்றும் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும்.

இந்த அறிக்கைகள் டிசம்பர் 6 அல்லது அதற்கு முன் அவர்கள் போட்டியிட்ட மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.”

“டிசம்பர் 6 அல்லது அதற்கு முன் வருமானம் மற்றும் செலவு அறிக்கையை சமர்ப்பிக்காத வேட்பாளர்கள் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்படும்.”

Related posts

நாடு திரும்பிய 290 இலங்கையர்கள்

ரஷ்யாவிடம் கடன் கோருகிறது இலங்கை

UTVகிராத் போட்டியின் பரிசளிப்பு விழா | UTV Qirat Competition 2023 Prize-giving Ceremony – First Stage