உள்நாடு

பாராளுமன்ற கொத்தணி : அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை

(UTV | கொழும்பு) – பாராளுமன்ற அமர்வு அடுத்த வாரம் இடம்பெறவுள்ள நிலையில், அதற்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்கு கடமையாற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் ரெபிட் என்டிஜன் பரிசோதனை (Rapid Antigen Test) மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இம்மாதம் 12, 13ம் திகதிகளில் ரெபிட் என்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கிம் மற்றும் பிரதமரின் இணைப்புச் செயலாளர் குமாரசிறி ஹெட்டிகே ஆகியோர் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் கடந்த வாரம் பாராளுமன்றத்துக்கு வருகை தந்துள்ளதால் அனைவருக்கும் என்டிஜன் பரிசோதனை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாடசாலை வேன் போக்குவரத்து – அரைவாசி கட்டணத்தை அறவிட தீர்மானம்

வாக்குச் சீட்டு அச்சிடும் பணிகள் 50 வீதம் நிறைவு

“அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க ஜனாதிபதி தீர்மானம்”