சூடான செய்திகள் 1

பாராளுமன்ற குழப்ப நிலைமை குறித்த அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

(UTV|COLOMBO)-பாராளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலைமை தொடர்பில் விசாரணைக்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று(22) சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளதாக பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.

சபாநாயகரிடம் அறிக்கை சமர்பிக்கப்பட்டதன் பின்னர், குறித்த அந்த அறிக்கையை சபாநாயகர், சட்டமா அதிபருக்கு அனுப்பிவைக்கவுள்ளார்.

குறித்த அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட வேண்டிய சட்டநடவடிக்கை குறித்தும் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படவுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் 15,16 மற்றும் 17 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் ஏற்பட்ட குழப்ப நிலை தொடர்பில் விசாரணை செய்வதற்கு, பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறியின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டது.

 

 

 

 

 

Related posts

‘டெக்னோ ஸ்ரீ லங்கா 2019’ அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி தலைமையில்

வனநாள் தினத்தை முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள்

சட்டவிரோத போதை பொருட்களுடன் ஒருவர் கைது