வகைப்படுத்தப்படாத

பாதிக்கபட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு கேஸ் அடுப்புகள் மற்றும் சிலின்டர்கள்

(UDHAYAM, COLOMBO) – களுத்துறை மாவட்ட, மில்லனிய பிரதேச செயலக பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஆயிரம் குடும்பங்களுக்கு கேஸ் அடுப்புகள் மற்றும் சிலின்டர்களை வழங்க லிட்ரோ கேஸ் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் அதன் ஆரம்ப நிகழ்வாக பாதிக்கப்பட்ட பத்து குடும்பங்களுக்கு கேஸ் அடுப்பு மற்றும் சிலிண்டர்கள்; ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்; நேற்று முற்பகல் வழங்கப்பட்டது.

கேஸ் அடுப்பு, சிலின்டர், ரெகுலேற்றர் ஆகியவற்றைக் கொண்ட ஐந்தாயிரத்துக்கு அதிகமான ஒரு பொருட் தொகுதியை கொண்டதாகும்.

பாராளுமன்ற உறுப்பினர் மலித் ஜயதிலக்க, லித்ரோ கேஸ் நிறுவன தலைவர் சலீல முணசிங்க, பணிப்பாளர் சமிந்த எதிரிவிக்ரம, மில்லனிய பிரதேச செயலாளர் சமந்திகா லியனகே ஆகியோரும் நிகழ்வில் பங்குபற்றினர்.

Related posts

Iran bent on breaking N-treaty

காலி இறப்பர் தொழிற்சாலையில் தீப்பரவல்

ஜோசப் ஜாக்சன் மரணம்