உள்நாடு

பாணகமுவ அந்நூர் மத்திய கல்லூரி பரீட்சையில் சாதனை

(UTV | குருநாகல்) – குருநாகல் இப்பாகமுவ கல்வி வலயதிற்குற்பட்ட பாணகமுவயில் அமைந்துள்ள அந்நூர் மத்திய கல்லூரி (தேசிய பாடசாலை) 2020 க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் மீண்டும் சாதனை படைக்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற க.பொ.த சாதாரன தரப் பரீட்சையில் 8 மாணவர்கள் 9 பாடங்களிலும் A சித்திகளையும் 3 மாணவர்கள் 8 பாடங்களில் A மற்றும் 1B சித்திகளைப் பெற்றதோடு பரீட்சைக்குத் தோற்றிய 101 பேரில் 90 பேர் க.பொ.த உயர்தரத்தில் கற்க தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 08 ஆம் திகதி மற்றொரு மைல் கல்லாக இப்பாடசாலை தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது. 2020ஆம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் வரலாற்றுச்சாதனை படைத்தது.
இதேவேளை 15 மாணவர்கள் சித்தியடைந்ததுடன் எம்.ஏ.மித்ஹான் என்ற மாணவன் 199 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்மொழி மூலமாக முதலாம் இடத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் 2020/06/29 அன்று க.பொ.த உயர்தர கணித,விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட்டதோடு இப்பாடசாலை 1AB பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டது.

2018ம் ஆண்டு இப்பாடசாலைக்கு அதிபராக கடமைப் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்ட ஏ.எஸ்.எம்.இர்ஷாத் அதிபரது தலைமையில் கல்வி நடவடிக்கைகளிலும் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் பாரிய அபிவிருத்தியை நோக்கிச் சென்றது.

தொடர்ந்தும் இப்பாடசாலை சமூகத் தலைவர்களை உருவாக்கும் பணியில் வீர நடைபோடுவதற்கு வாழ்த்துகின்றோம்.

Related posts

மக்களுக்காக எத்தகைய முடிவையும் எடுக்கத் தயார் – ஜனாதிபதி ரணில்

editor

கட்டுவாபிட்டிய தேவாலயத்திற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

சீன கப்பலுக்கு அனுமதியில்லை!