வகைப்படுத்தப்படாத

பாடசாலைக்கு சென்ற 09 வயது மாணவி விபத்தில் பலி

(UTV|JAFFNA)-கடற்படையின் கவச வாகனம் மோதி பாடசாலை மாணவி ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் இன்று காலை 8.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த திருலங்கன் கேசனா (வயது 9) என்ற மாணவி தனது மாமனாருடன் மோட்டார் சைக்கிளில் பாடசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே கடற்படையின் வாகனம் மோதி விபத்துள்ளாகியுள்ளது.

இந்த விபத்தில் மாணவி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார். மாமன் காயங்களுக்கு உள்ளான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புங்குடுதீவு மகா வித்தியாலயத்திற்கு அருகாமையில் உள்ள கடற்படை முகாமிற்கு உணவு பொருட்களை விநியோகம் செய்ய பயன்படுத்தப்படும் கவச வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி இவ்விபத்து ஏற்பட்டுள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய கடற்படை வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்துத் தொடர்பாக ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Sirisena and Madurangi to lead SL at Commonwealth TT Championship

இலங்கைக்கு உதவ பல நாடுகள் முன்வந்துள்ளன

நாட்டில் 14ஆவது கொரோனா மரணம் பதிவாகியது