உள்நாடு

பாடசாலைகளுக்கான கிறிஸ்மஸ் விடுமுறையில் திருத்தம்

(UTV | கொழும்பு) –  அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாதம் வழங்கப்படவுள்ள விடுமுறையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றினை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

ஏலவே எதிர்வரும் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பாடசாலைகளுக்கு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு விடுமுறை வழங்க கல்வியமைச்சினால் தீர்மானிக்கப்பட்ட நிலையில், தற்போது குறித்த தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதற்கமைய, எதிர்வரும் 24 ஆம் திகதி முதல் 2022 ஜனவரி 2 ஆம் திகதி வரை குறித்த விடுமுறையை நீடிக்கக் கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, 2022 ஜனவரி 3 ஆம் திகதி பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகும் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இன்று ஒருநாள் மாத்திரம் பாராளுமன்ற அமர்வு

மஹேல ஜயவர்தனவிடம் இன்று விசாரணை நடத்தப்படாது

வேட்பாளர்களுக்கு பிரதமர் விடுத்துள்ள ஆலோசனை