சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் போதைப்பொருள் ஒழிப்பு வாரம் பிரகடனம்

(UTV|COLOMBO)-ஜனவரி மாதம் 21 முதல் 25 ஆம் திகதி வரை போதைப்பொருள் ஒழிப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“போதைப்பொருள் ஒழிப்பை மாணவர்களின் மூலம் கற்றுக்கொள்வோம்’ என்ற தொனிப்பொருளின் கீழ் பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்களையும் இலக்காக கொண்டு பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசதத்தின் வழிகாட்டலின் கீழ், கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

ஜனாதிபதி செயலகம் உட்பட அரச நிறுவனங்கள் இணைந்து ஒன்றிணைந்த வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கல்வி துறை சார்ந்த அதிகாரிகள், அதிபர்களை தெளிவூட்டுவதற்கான அனைத்து ஆலோசனைகளையும் கல்வி அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளன.

 

 

 

 

Related posts

வறட்சியால் மின்சார உற்பத்தியில் சிக்கல்

கொழும்பு வோர்ட் பிளேஸ் வீதி மூடப்பட்டது

சீன சிகரெட்டுக்கள் குறித்து மங்கள விளக்கம்