சூடான செய்திகள் 1

பாடசாலைகளில் பாதுகாப்பு குழு நியமனம்…

(UTV|COLOMBO) அனைத்துப் பாடசாலைகளிலும் பாதுகாப்புக் குழுவொன்றை நியமிப்பதற்கு, பாடசாலைகளின் அதிபர்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய பாடசாலைகள் அனைத்து இரண்டாம் தவணைக்காக மீண்டும் திறக்கப்படவுள்ள நிலையில், பாடசாலைகளின் பாதுகாப்புக் கருதி அதிபர்களுக்கு தேவையான அனைத்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் நிஷால் ரணசிங்க தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்காக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், பொலிஸ்மா அதிபர் உள்ளிட்டோரின் ஒத்துழைப்பு பெறப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

Related posts

“வில்பத்துவில் ஓர் அங்குலமேனும் அபகரிக்கப்படவில்லை” மன்னாரில் ஜனாதிபதி முன்னிலையில் அமைச்சர் ரிஷாட் தெரிவிப்பு!

நபியவர்களின் வாழ்க்கை முன்மாதிரி எமது ஆட்சியமைப்புக்கு மிகவும் அவசியம்

மனுஷா நாணயக்கார சற்று முன்னர் தனது அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா