உள்நாடு

பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும்

(UTV|கொழும்பு) – பாடசாலைகளில் கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

பாடசாலை பரீட்சைகள் இடம்பெறும் போதும் இந்த நடைமுறைகள் மிகக் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டுக்கு பொருத்தம் இல்லாத அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மறுசீரமைக்கப்படும் எனவும் விரைவில் புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

Related posts

ரிஷாத்தின் மனு மீதான பரிசீலனைகளில் இருந்து மற்றுமொரு நீதியரசர் விலகல்

“சொத்துக்கள் உள்ளவர்களுக்கு வரும் புதிய வரி”

இடியப்பத் தட்டுகள் உட்பட 8 பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பொருட்களுக்கு தடை