உள்நாடுசூடான செய்திகள் 1

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று மீண்டும் ஆரம்பம்

(UTV|கொழும்பு)- கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக மூன்று மாதங்களுக்கு பின்னர் நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய இன்றைய தினம் 5, 11 மற்றும் 13 ஆம் தரங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மாத்திரம் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளனர்.

கற்பிக்கும் பாடநெறி ஆரம்பமாவதற்கு 30 நிமிடங்களுக்கு முன்னர் ஆசிரியர்கள் பாடசாலைகளுக்கு சமூகமளித்தல் போதுமானது எனவும் கல்வி அமைச்சின் செயலாளர் என்.எம்.எம் சித்ராநந்த தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாடநேரம் முடிவடைந்ததன் பின்னர் அவர்கள் பாடசாலையில் இருந்து வெளியேற முடியும் எனவும் கல்வியமைச்சு குறிப்பிட்டுள்ளது.

மேலும், மாணவர்களுக்கு தேவையான சுகாதார வழிமுறைகளை பெற்றுக்கொடுக்க பாடசாலை நிர்வாகம் நடவடிக்கை எடுப்பதோடு, விளையாட்டு மற்றும் கூட்டான செயற்பாடுகளில் மாணவர்களை ஈடுப்படுத்த வேண்டாமெனவும் கல்வி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது

இதேவேளை மூன்றாம் கட்டமாக எதிர்வரும் 20 ஆம் திகதி முதல் 12 மற்றும் 10 தரங்களில் கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படவுள்ளதுடன், எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 3,4,6,7,8 மற்றும் 9ம் தரங்களில் பயிலும் மாணவர்கள் பாடசாலைக்கு அனுமதிக்கப்படுவார்கள் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

பாதிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

இரத்தினக்கல், ஆபரணத் துறையில் வீழ்ச்சி – ஜனாதிபதியின் புதிய யோசனை!