உள்நாடு

 பாடசாலை விடுமுறைகளில் திருத்தம்?

(UTV | கொழும்பு) –  பாடசாலை விடுமுறைகளில் திருத்தம்?

2022 ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டதை அடுத்து, பாடசாலை விடுமுறை காலத்தை திருத்துவதற்கு கல்வியமைச்சின் அதிகாரிகள் தீர்மானித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகும் பாடசாலை தவணை மே 29 ஆம் திகதி வரை தொடரும். இந்தநிலையில், புதிய பாடசாலை நேர அட்டவணை விரைவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மே 29 ஆம் திகதி ஆரம்பமாகும் 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை ஜூன் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள்களை திருத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக 2022 க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வைத்தியர்கள், ஊழியர்கள் முன்னெடுத்து வந்த போராட்டம் கைவிடப்பட்டது

editor

குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து இனக்கலவரம் – இந்திய புலனாய்வு அமைப்புக்கள் எச்சரிக்கை.

திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் ஒருவர் கைது