உள்நாடு

பாடசாலை விடுமுறை தொடர்பில் முக்கிய அறிவிப்பு

(UTV|கொழும்பு) – அனைத்து பாடசாலைகளுக்கும் மேலும் ஒரு வாரத்திற்கு விடுமுறை வழங்கப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் 27 ஆம் திகதி பாடசாலைகளை மீள திறப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அதற்கமைய, எதிர்வரும் 27 ஆம் திகதி தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது

இதேவேளை, கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்தப்படும் தினம் தொடர்பான அறிவித்தல் எதிர்வரும் திங்கட்கிழமை அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தபால் ஊழியர்களின் விடுமுறை ரத்து

editor

எல்பிட்டிய தேர்தலின் தற்போதைய நிலவரம்

editor

கொரோனா தொற்றுக்குள்ளானோரின் எண்ணிக்கை 77 ஆக உயர்வு